இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்போது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் ஆட்சியின் சரியான நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோடு, கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
இதனால், இழந்த இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி அதிகாரித்தில் இருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைத்தன. இதில் புதிய கூட்டணி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றார். இதனால் பிரதமராக இருந்த இம்ரான் கான் தற்போது எதிர்க்கட்சி தலைவராக மாறிவிட்டார். தற்போது இம்ரான் கான் ஆளும் ஷெபாஸ் ஷெரிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல்..
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், நீதிபதி ஒருவருக்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இம்ரான் கான் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு நிலவியது.
போராட்டத்துக்கு அழைப்பு
இத்தகைய பரபரப்பான சூழலில், தெஹிரீக் இ இன்சாப் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் இம்ரான் கானை கைது செய்யும் நிலைமை வந்தால் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பிடிஐ கட்சியின் துணைத்தலைவர் ஷா முகம்மது குரோஷி ”இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்” என்றார். இது பாகிஸ்தானில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்ய வேண்டும்
இந்த நிலையில், இம்ரான் கான் கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது அவருக்கு கோர்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிடது. இதையடுத்து இன்று அவர் கோர்டில் ஆஜராகினார். அப்போது கோர்ட் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர். வழக்கு விசாரணையின் போது, போலீஸ் தரப்பில், இம்ரான் கான் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக உள்ளது என்றும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
ஜாமீன் வழங்கி உத்தரவு
தொடர்ந்து இம்ரான் கான் சார்பில் ஆஜரான வக்கீல், ”இந்த வழக்கு பழிவாங்கும் எண்ணத்தில் போடப்பட்டது என்றும், ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை எந்த வித பயமுமின்றி விமசித்த காரணத்தினாலேயே (குறிப்பாக ஆளும் கட்சிகள்) இவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இம்ரான் கானுக்கு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ஒரு லட்சம் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.