மறைந்த தமிழக முன்னாள் முதஸ்வர் மு. கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாக தெரிகிறது. அதுவும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ராசாத்தி அம்மாளுக்கு அவ்வபோது உடல்நிலை கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வயிற்றுவலி, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிர்ச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரின் உடல் உபாதைகளை சரிசெய்ய அப்பல்லோ மருத்துவர்களின் பரிந்துரையின்படி ராசாத்தி அம்மாள் மருந்து, மாத்திரைகள் எடுத்து வருவதுடன், அவ்வபோது மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். ஆனாலும் அவருக்கு அஜீரண கோளாறு உள்ளிட்ட உபாதைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள பிரபல ஃபோர்ன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அப்பல்லோ மருத்துவர்கள் அண்மையில் பரிந்துரைந்தன்ர்.
இந்த பரிந்துரையின்படி, ராசாத்தி அம்மாள் நாளை ஜெர்மனிக்கு செல்ல உள்ளார். அவருடன் அவரது மகளும், திமுக எம்பியுமான கனிமொழியும் ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு கிட்டதட்ட ஒரு மாத காலம் ராசாத்தி அம்மாள் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாகவும், அதுவரை கனிமொழியும் தனது தாயை அருகில் இருந்து கலனி்த்து கொள்ள அங்கே தங்கியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் திமுக மகளிரணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.