படிப்பு, அழுத்தம், ஏழ்மை ஆகிய பல காரணங்களால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது இந்நாட்களில் அதிகரித்து வருகிறது. இது ஒரு சமூகமாக நாம் கவலைக்கொள்ள வெண்டிய, கூர்ந்து கவனிக்க வேண்டிய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினம் தினம் தொடந்து தற்கொலை பற்றிய செய்திகள் வருவது மனதை பதபதைக்க வைக்கிறது. உலகில் காலூன்றி வாழ்ந்து, வென்று கட்ட வேண்டிய சிறுவர் சிறுமிகளும், இளைஞர்களும் தோல்வியை தழுவிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிக்கிறது. கந்தர்வக்கோட்டையில் மற்றொரு தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அன்டனூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். சேகைன் மனைவி ரேணுகா. இவர்களது மகள் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனாவின் தந்தை சேகர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் பிறகு ரேனுகா தீத்தான் விடுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் மீனாவை ஒப்படைத்தார்.
அங்கிருந்து கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மீனா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மீனா அதில் தோல்வியுற்றார். ஆகையால் மீண்டும் துணைத் தேர்வு எழுதினார். ஆனால், துனைத் தேர்விலும், சமூக அறிவியல் பாடத்தில் மீண்டும் மீனா தோல்வியுற்றார்.