சென்னை: ஒரு வழியாக படப்பிடிப்பை ஆரம்பித்த அந்த இயக்குநர் வெகு விரைவாக முடித்து விட்டு கிளம்பி விட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்காராம்.
உச்ச நடிகர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா என பல இயக்குநர்களும் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஏன் தான் தனக்கு இப்படியொரு சிக்கல் என எண்ணி ரொம்பவே ஃபீல் செய்து வருகிறாராம் அந்த இயக்குநர்.
அடிக்கடி மீட்டிங் வைத்து நாலா பக்கத்தில் இருந்தும் கொடுக்கும் பிரஷர் தான் இந்த விரக்திக்கு காரணம் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
கற்பனையே செய்யல
அடுத்தடுத்த படங்களில் இப்படியொரு வளர்ச்சி வரும் என கொஞ்சம் கூட அந்த இயக்குநர் கற்பனையில் கூட நினைக்காதது எல்லாம் அவர் கைவசம் நடைபெற்று வருவதே அவருக்கு மிகப்பெரிய பாரமாக மாறி உள்ளது. இரு படங்கள் ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் படம் பண்ணும் பாக்கியம் அந்த இயக்குநருக்கு கிடைத்துள்ளது பெரும் அதிர்ஷ்டம் தான்.
லக் இருக்கு வொர்க் ஆகணுமே
வெறும் லக்கை மட்டுமே வைத்துக் கொண்டு சினிமாவில் சாதிக்க முடியாது. பெரிய ஹீரோ படத்தை கையாளும் திறமை அந்த இயக்குநருக்கு போதவில்லை என்பதற்கு சாட்சியாக அவரது முந்தைய படம் பெரும் சொதப்பு சொதப்பியது. இந்நிலையில், அதை விட பெரிய நடிகரை இயக்கும் பொறுப்பு கிடைத்துள்ள நிலையில், அனைத்தையும் கவனமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
முடிச்சிட்டு கிளம்பணும்
ஜாலியான அந்த இயக்குநரையே சீரியஸான இயக்குநராக மாற்றி விட்டனர். இந்நிலையில், எப்படியாவது இந்த படத்தை முடித்து விட்டுக் கிளம்பினால் போதும் என்கிற ரேஞ்சுக்கே வந்து விட்டாராம் அந்த இயக்குநர். படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில், பெரு மூச்சு விட்டவர், எவ்வளவு சீக்கிரம் சூட்டிங்கை முடிக்கிறோமோ முடித்து விட வேண்டியது தான் என்கிற முனைப்பில் இருக்காராம்.
நாலா பக்கமும் பிரஷர்
அதற்கு காரணம் அவருக்கு நாலா பக்கத்தில் இருந்தும் வரும் பிரஷர் தான் என்கின்றனர். நடிகர் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள், தயாரிப்பு தரப்பு கொடுக்கும் உத்தரவு மற்றும் தேவையில்லாமல் கிடைக்கும் ஃப்ரீ அட்வைஸ் என மனுஷன் ரொம்பவே டென்ஷன் ஆகி விட்டாராம். ஆனால், அனைத்தையும் மீறி அனைவரையும் ஆஃப் செய்ய தனக்கு கிடைத்திருக்கும் லாஸ்ட் சான்ஸை வெற்றிகரமாக முடித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற முடிவில் தீர்மானமாக உள்ளாராம் அந்த இயக்குநர் என கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக கிளம்பி உள்ளது.