மதிமுக – நாம் தமிழர் கட்சியினர் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதிக்கொண்ட வழக்கில், இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
“எல்லாத் துறைகளிலும் சிக்கல் உள்ளது, பள்ளிகல்வி துறைக்கு ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் ஆர்வமாக செயல்பட வேண்டும். முதலமைச்சர் காசு கொடுக்காமல் 5000 பேர்களை முதலில் திரட்டட்டும், அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் திமுகவில் இணைந்தார்கள் என தெரியவில்லை.
லிம்கா நிறுவனத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனம் முறையாக பணம் செலுத்தி படத்தை வாங்கி அதை வெளியிடுகிறார்கள். ரெட் ஜெயண்ட் படம் வாங்குவதால் தான் வெளிவரமுடியாமல் இருக்கும் பல படங்கள் வெளி வந்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடிகர் சரத்குமார் நடிப்பது தவறு. அவர் அதில் நடிக்க கூடாது. சூது எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்பது என்பது முதல் குடிமகன் என்ற அடிப்படையில் முதலில் முதலமைச்சர் அவரின் கருத்தை கூறட்டும். அதன்பிறகு மக்களின் கருத்தை கேட்கட்டும். மக்கள் கருத்தைவிட மக்கள் நலனே முக்கியம் அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். கருத்து கேட்டால் பல கருத்துக்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வரும்” என்று கூறினார்.
செய்தி: க. சண்முகவடிவேல் – திருச்சி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”