காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த அரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் பேருந்து ஓட்டுநர்.