ஜம்மு காஷ்மீரில் கடந்த 11ஆம் தேதி நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக மதுரையில் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தமிழக நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை விமான நிலையம் நோக்கி வந்தபோது காரை இடை மறித்த பாஜகவினர் கொலை வெறியுடன் அந்த காரை தாக்கியத்துடன் செருப்பை வீசி எறிந்தனர். இந்த் சம்பவத்தில் பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 2 பெண்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.