பிரான்ஸில் பிச்சை எடுக்கும் நபரிடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்த நபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் பிரான்ஸில் உள்ள ஒரு இடத்தில் அமைந்திருக்கும் ஏடிஎம் மையம் அருகே நின்று பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது பல ஏழைகளுக்கு உதவி செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்து தனது ஏடிஎம் கார்டை நைஜீரிய இளைஞரிடம் கொடுத்து உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை எடுத்து கொள் என கூறினார்.
இதையடுத்து அந்த இளைஞர் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் போட்ட நிலையில் பணம் குறைவாக இருப்பதாக பார்த்து இயந்திரத்தை குத்தினார்.
இது உதவ நினைத்த நபருக்கு வேதனையை கொடுத்தது.
அடுத்து பிச்சைக்காரர் செய்தது தான், உதவியவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஏனெனில் மொத்த பணத்தையும் எடுத்த அவர் திடீரென வேகமாக நடந்து சென்று தனது சைக்கிளை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இது எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு அதிர்ச்சி அனுபவம் என உதவியர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் கூறுகையில், நல்லது செய்ய நினைத்தவருக்கு நடந்ததை பாருங்கள் எனவும் மேலும் சிலர், அந்த பிச்சைக்காரருக்கு அந்த பணம் தேவைப்பட்டதால் எடுத்து சென்றிருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.