சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய உயர்வு ஒப்பந்தக் காலத்தை ஏற்கனவே இருந்தபடி 3 ஆண்டாக குறைக்க ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். 3 ஆண்டாக இருந்த ஊதிய ஒப்பந்த காலத்தை 2001ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா 5 ஆண்டாக அதிகரித்தார். 2006ல் ஆட்சிக்கு வந்த கலைஞர், தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஊதிய ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டாக மாற்றினார் என தெரிவித்தார்.