ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் GOBAR-Dhan திட்டத்தின் கீழ், ராஜஸ்தானின் சாஞ்சூரில் தனது முதல் மாட்டு சாணத்திலிருந்து கம்பிரஸ்டு பயோகேஸ் திட்டத்தைத் தொடங்கியது.
ஒரு வருடத்தில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலை, ஒரு நாளுக்கு 100 டன் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்திப் பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்துகிறது.
மேலும் இத்தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் கம்பிரஸ்டு பயோகேஸ்-ஐ வாகனங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடி முடிவு செய்துள்ளது.
தூள் கிளப்பிய ஹிந்துஸ்தான் யூனிலீவர்.. முதல் காலாண்டில் ரூ.2391 கோடி லாபம்.. !
ராஜஸ்தான்
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் உள்ள பத்மேடா கிராமத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு
“இந்தத் திட்டம் ஏப்ரல் 2018 இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட GOBAR-Dhan திட்டத்தின் கீழ் ஸ்வச் பாரத் மிஷன் (கிராமீன்) இன் கீழ் மக்கும் கழிவு மேலாண்மை கூறுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அம்பானி, அதானி
சமீபத்தில் கௌதம் அதானி-யின் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா இரண்டு புதிய கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas – CBG) தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.
600 கோடி ரூபாய்
இந்தத் தொழிற்சாலைகளை அமைக்க அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா 600 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas – CBG) என்பது விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்
மேலும் CBG மூலம் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். இதை வைத்து வீட்டு உபயோகத்திற்காகக் குழாய் வாயிலாக வரும் இயற்கை எரிவாயுவிற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும். ஆனால் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் GOBAR-Dhan திட்டத்தின் கீழ் முழுக்க முழக்க மாட்டு சாணத்தின் மூலம் தயாரிக்கப்படும் பயோகேஸ் திட்டம்.
HPCL: first cow dung compressed biogas project in Rajasthan; 100 tonne cow dung per day
HPCL: first cow dung compressed biogas project in Rajasthan; 100 tonne cow dung per day | மாட்டுச் சாணத்தில் இருந்து பயோ கேஸ்.. பிரம்மாண்ட திட்டத்தைச் செயல்படுத்தும் HPCL..!