'மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்' – ரயில்வே கூடுதல் இயக்குனர்

கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம், தயவு தாட்சியமின்றி நடவடிக்கை பாயும் என்று ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேட்டியளித்துள்ளார்.
மதுரை இருப்புப்பாதை காவல் உட்கோட்டத்தில், பணியாற்றும் காவலர்களுக்கு வேலை பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டும், பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கும் பொருட்டு காவலர்களின் மன மகிழ்ச்சிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா IPS தலைமை வகித்து காவலர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் பொருட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
image
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே கூடுதல் இயக்குனர் வனிதா IPS பேசுகையில், ஆப்ரேஷன் கஞ்சா மூலம் கஞ்சா கடத்தல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார். அதில் ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா சுமார் 1000 கிலோவுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து காவலர்கள் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
image
மேலும் ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்கும் விதமாக ரெயில்வே பாதுகாப்பு படையுடன், இருப்புப்பாதை காவல்துறை இணைந்து பணியாற்றி வேலைப்பளுவை குறைத்து வருகிறோம். தொடர்ந்து மனமகிழ்ச்சியுடன் காவலர்கள் பணியில் ஈடுபட இதுபோன்ற ஆலோசனை வழங்க பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பெண் காவலர்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
image
தொடர்ந்து பேசியவர் ரூட்டுதலை என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையங்களில் ஆயுதங்களை அச்சுறுத்தும் வகையாக பயன்படுத்தியதில் 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே ஆயுத கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, தயவு தாட்சியமின்றி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொரிவித்தார்.
image
மேலும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு ஆயுத கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரயில்வே துறையின் மூலம் இதுவரை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் படி 6 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுவோர்கள் மீது குண்டாஸ் வழக்குகள் பதியப்படும் என்பதையும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.