கோவை: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினரை நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார். அதிமுக ஆட்சியில் வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கூற வேண்டும். மாநகராட்சி நிதியை எடுத்து வெள்ளலூர் பேருந்து நிலையத்தை கட்டி விட்டு அரசு நிதி ஒதுக்கியது போல் ஈபிஎஸ் பேசுகிறார் என தெரிவித்தார்.