விதி என்ற சொல்லை நாம் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் பயன்படுத்தி இருப்போம். அப்படி விதி யாரை விட்டது என்பது போல எதிர்பாராத விபத்துகளில் அற்பக் காரணங்களால் சிலர் உயிரிழக்கும் செய்திகள் வெளியாகி அவ்வப்போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் மின்சாரம் சரியாக துண்டிக்கப்படமால் இருந்ததை கவனிக்காமல் மின்மாற்றியில் ஏறி பணிசெய்த மின்வாரிய ஊழியர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே தண்டலம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் திருப்புகழி பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற மின்வாரிய ஊழியர் இந்த பிரச்சனையை சரிசெய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி தீப்பற்றி எரிந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். டிரான்ஸ்பார்மரில் இரண்டு பேஸில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், மூன்றாவது பேஸில் மின்சாரம் சரிவர துண்டிக்கப்பட வில்லை. இதை கவனிக்காமல் பக்கிரிசாமி மின்மாற்றியில் ஏறி பணி செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால், அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.