இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வினியோகஸ்தர் கெயில் (இந்தியா) லிமிடெட், ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம்-ன் முன்னாள் கிளை நிறுவனம் உடனான ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கெயில் நிறுவனம் இந்தியாவின் உரம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் குறைக்கத் துவங்கியுள்ளது.
கெயில் நிறுவனத்தின் குறைந்த அளவிலான எரிவாயு விநியோகம், இந்தியாவின் யூரியா உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த விநியோக குறைப்பு நீடித்தால் விவசாய உரங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியாவைத் தள்ளும்.
விவசாய துறை & கெமிக்கல் துறையில் லாபத்தினை அள்ளலாம்.. ஏன்.. நிபுணர்கள் சொல்லும் காரணத்தை பாருங்க!
ரஷ்யா
ரஷ்யாவின் Gazprom Marketing and Trading Singapore (GMTS), இப்போது Gazprom Germania வின் துணை நிறுவனமானது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பின்பு மேற்கத்திய நாடுகளின் தடையின் காரணமாக ஏப்ரல் மாதம் எவ்விதமான அறிவிப்பும் விளக்கமும் இல்லாமல் GMTS நிறுவனம் ஜெர்மனி அரசின் கைக்குச் சென்றது. GMTS ரஷ்யா அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
Gazprom நிறுவனத்தின் சார்பாக GMTS நிறுவனம் 2012ல் GAIL க்கு சில திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சரக்குகளை வழங்க 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் கீழ் வருடத்திற்கு 2.5 மில்லியன் டன் LNG-ஐ விநியோகம் செய்யத் திட்டமிட்டு 2018ல் துவங்கப்பட்டது. தற்போது நிறுவனம் ரஷ்யா கையைவிட்டுப் போனதால் நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் விநியோகங்களைச் செய்யப்படாமல் உள்ளது.
கெயில் நிறுவனம்
கெயில் நிறுவனம் இந்தியாவில் எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்கும் முக்கிய நிறுவனமாகும். கெயில் இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு குழாய் வலையமைப்பை இயக்கி வருகிறது. தற்போது Gazprom நிறுவனத்தின் சார்பாக எரிவாயு வராத நிலையில் கெயில், சில உர தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகத்தை 10% குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விநியோகம் குறைப்பு
இதேபோல் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு விற்பனையை 10%-20% வரையில் குறைந்து தனது குறைந்தபட்ச சகிப்புத்தன்மை வரம்பிற்குக் கட்டுப்படுத்தியுள்ளது கெயில். இந்த எரிவாயு பற்றாக்குறை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
சிட்டி கேஸ் விலை உயர்வு
திங்கட்கிழமை முதல் மாதாந்திர திருத்தத்தின் படி கெயில் நிறுவனம் சிட்டி கேஸ் நிறுவனங்களுக்கு வழங்கும் இயற்கை எரிவாயுவின் விலை 18% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஒரு mmBtuக்கு $10.5 ஆக உள்ளது.
விலை உயர்வு
இது மார்ச் மாத இறுதியில் உள்நாட்டு விநியோகத்திற்காகச் சிட்டி கேஸ் நிறுவனங்கள் செலுத்திய விலையைக் காட்டிலும் மூன்றரை மடங்கு மற்றும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விடக் கிட்டத்தட்ட ஆறு மடங்கு ஆகும்.
லக்னோ
இதன் மூலம் சிட்டி கேஸ் நிறுவனங்கள், சிஎன்ஜி மற்றும் குழாய் வாயிலாகச் சமையலறை எரிவாயு விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரீன் கேஸ் லிமிடெட் திங்கள்கிழமை லக்னோவில் ஒரு கிலோவுக்குச் சிஎன்ஜி விலையை 5.3 உயர்த்திக் கிலோவுக்கு ரூ.96.10 ஆக உயர்த்தியது.
GAIL rationing gas amid Previously Russia owned Gazprom Germania cuts supplies
GAIL rationing gas amid Previously Russia owned Gazprom Germania cuts supplies ரஷ்ய நிறுவனத்தால் இந்தியாவுக்குப் புதிய பிரச்சனை.. கடைசியில் பாதிப்பு மக்களுக்குத் தான்..!