மதுரை, சென்னை, புனே ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் ஊக்க மருந்தை கொள்முதல் செய்து வலைத்தளம் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் போதை ஊசி பயன்படுத்திய 4 இளைஞர்களும், போதை மருந்து விநியோகம் செய்த என்ஜினீயர் உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஊக்க மருந்தை போதைக்காக ஊசி மூலமாக பயன்படுத்தி வந்ததாகவும், அதிக லாபத்திற்கு இளைஞர்களிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் உரிய அனுமதியின்றி மருந்துகளை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகார்க் எச்சரித்துள்ளார்.