BHEL recruitment 2022 for 25 Diploma, Engineering Graduate Apprentices apply soon: தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 28 கடைசி தேதியாகும்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருமயம் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: DRDO Jobs: பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் 1901 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 21
Mechanical – 10
Production – 2
Mechatronics – 1
Electrical & Electronics – 1
Electronics & Communication – 1
Civil – 1
Computer Science – 1
IT – 1
கல்வித் தகுதி: 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Accountant – 1
கல்வித் தகுதி : 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant-HR – 1
கல்வித் தகுதி : 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
Computer Science – 1
கல்வித் தகுதி: Bsc., Computer Science படித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை; ரூ. 9,000
Technician (Diploma) Apprentices
மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 4
Mechanical – 2
Electronics & Communication – 1
Civil Engineering – 1
கல்வித் தகுதி: 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 8,000
வயது தகுதி: 01.08.2022 அன்று 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகள் படி வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/tms/app_pro/pppuindex.jsp என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.08.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Graduate%20Apprentices%20-%20Final.pdf மற்றும் https://trichy.bhel.com/tms/app_pro/Notification%20-%20Technician%20Apprentices%20-%20Final.pdf என்ற இணைய தள பக்கங்களைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil