Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

இந்தியாவில் சமீப காலமாக அதிகளவிலான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் பல முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் கூகுள் இந்தியாவில் நடந்து வரும் சைபர் தாக்குதல் குறித்தும், தகவல் பாதுகாப்பு குறித்தும் அதிகளவிலான கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. இதற்காகப் பல முக்கியத் திட்டங்களையும் விழிப்புணர்வுகளையும் செய்யத் துவங்கியுள்ளது.

இதன் பிடி 2022 ஆம் ஆண்டின் முதல் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் எவ்வளவு சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளது எனக் கூகுள் விளக்குகிறது.

உலகில் எந்த நாட்டு மக்கள் அதிக டிஜிட்டல் கரன்சியை வைத்துள்ளனர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

 சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல்

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் இந்தியாவில் ஒரு நாளுக்குச் சராசரியாக 18 மில்லியன் சைபர் தாக்குதல்களையும், 200,000 அச்சுறுத்தல்களையும் கண்டுள்ளது என்று கூகுள் நிறுவனத்தின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி பிரிவுக்கான இன்ஜினியரிங் – துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

சேஃபர் வித் கூகுள்

சேஃபர் வித் கூகுள்

ஆகஸ்ட் 25 அன்று கூகுளின் சேஃபர் வித் கூகுள் நிகழ்வின் போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராயல் ஹேன்சன், ஒரு வகையில் இந்தச் சைபர் அட்டாக் என்பது யாராவது நம்முடைய தகவல்களைத் திருட சைபர் அட்டாக் செய்வார்களாக என்பதைத் தாண்டி நாம் இத்தகையைத் தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கிறோமா என்று கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ராயல் ஹேன்சன்
 

ராயல் ஹேன்சன்

இந்தியாவில் நடக்கும் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளிலும் 30 சதவீதம் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது உலகிலேயே அதிக அளவிலான டிஜிட்டல் பணப்பரிமாற்ற அளவு என்றும் ராயல் ஹேன்சன் (Royal Hansen) இக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

டிஜிட்டல் சேவை

டிஜிட்டல் சேவை

ஆனால் அதேவேளையில் இந்தியாவும் இந்திய மக்களும் அச்சப்பட வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது. டிஜிட்டலுக்குச் செல்வது என்பது மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, கெட்டவர்கள் அதே கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் ராயல் ஹேன்சன் கூறினார்.

சைபர் செக்யூரிட்டி

சைபர் செக்யூரிட்டி

இந்தியாவில் பல நகரங்களில் சைபர் செக்யூரிட்டி ரோட்ஷோக்களை நடத்த உள்ளோம், இக்கூட்டத்தில் 100,000 ஸ்டார்ட்அப்கள், டெவலப்பர்கள், ஐடி தொழில்கள், வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் பாதுகாப்பான செயலிகளை உருவாக்க முக்கிய முயற்சிகளைச் செய்ய உள்ளோம். இந்த முயற்சியின் மூலம் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் உதவக் கூகுள் உத்தேசித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India saw 18 million cyber attacks in just 3 month says Google’s Royal Hansen

India saw 18 million cyber attacks in just 3 month says Google’s Royal Hansen | Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

Story first published: Thursday, August 25, 2022, 20:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.