DOLO 650: கொடுத்ததே 10 கோடி தான்.. ரூ.1000 கோடி எல்லாம் இல்லை..!

பெங்களூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் டோலோ-650 மாத்திரையைத் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் அலுவலகத்தில் வருமான வரித்துறை கடந்த மாதம் சுமார் 20க்கும் அதிகமாக அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது.

இந்தச் சோதனைக்குப் பின்பு டோலோ-650 மாத்திரை நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான ஒன்றாக இருக்கும் மருத்துவர்களுக்குத் தங்களுடைய டோலோ 650 மாத்திரையைப் பரிந்துரைக்கு சுமார் 1000 கோடி ரூபாய்க் கொடுத்தாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குத் தற்போது மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் விளக்கம் கொடுத்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் டோலோ 650 மாத்திரைகளைச் சாக்லேட் கணக்காகச் சாப்பிட்ட கதையை யாராலும் மறக்க முடியாது.

Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!

டோலோ 650

டோலோ 650

டோலோ 650 மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோ லேப்ஸ், மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்காக மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை விநியோகித்ததாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் இந்த மாத்திரை இந்தியா முழுவதும் பிரபலமான நிலையில் இந்தச் செய்தி மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது.

ரூ.10 கோடி மட்டுமே

ரூ.10 கோடி மட்டுமே

எங்களுடைய மருந்தைச் சந்தைப்படுத்தவும் மற்றும் விளம்பரத்திற்காகவும் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கும் குறைவான தொகையை மட்டுமே செலவழித்ததாக மைக்ரோ லேப்ஸ் கூறியது.

 50 சதவீத சந்தை பங்கு
 

50 சதவீத சந்தை பங்கு

Dolo 650 ஒரு மெகா பிராண்டாகும், அதன் தரம், சந்தையில் அதன் கிடைக்கும் தன்மை மற்றும் நாடு முழுவதும் சென்றடையும் காரணத்தால் கோவிட்க்கு முன்பே 50 சதவித சந்தை பங்கைக் கொண்ட ஒரு பிராண்ட் ஆக உள்ளது. இது தான் வர்த்தக வெற்றிக்கு முக்கியமான காரணமாக உள்ளது என மைக்ரோ லேப்ஸ் சிஎம்டி திலீப் சுரானா தெரிவித்துள்ளார்.

 1,000 கோடி ரூபாய் குற்றச்சாட்டு

1,000 கோடி ரூபாய் குற்றச்சாட்டு

டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசங்களை இந்த மருந்தைப் பரிந்துரை செய்ய மருத்துவர்களுக்கு வழங்கியதாக மத்திய நேரடி வரி வாரியம் குற்றம்சாட்டியதை இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிபதி விலாசல்

நீதிபதி விலாசல்

பொது நல வழக்கு உச்சநீதிமன்றம் விசாரித்த போது நீதிபதி டி ஒய் சந்திரசூட், இது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும், அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவருக்கும் இதுவே பரிந்துரைக்கப்பட்டது என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Dolo 650 freebie case: Micro Labs spent under Rs 10 crore annually for promotions

Dolo 650 freebie case: Micro Labs spent under Rs 10 crore annually for promotions DOLO 650: கொடுத்ததே 10 கோடி தான்.. ரூ.1000 கோடி எல்லாம் இல்லை..!

Story first published: Thursday, August 25, 2022, 21:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.