கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு நபருக்கும் அக்கறை இருக்கும் என்பது தெரிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் முதலீட்டிற்கு பாதுகாப்பு மட்டுமின்றி 10 முதல் 12 சதவீதம் வருடாந்திர வட்டி கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்த வகையில் பாதுகாப்பு மற்றும் அதிக வட்டி ஆகிய இரண்டும் ஒருசேர அமைந்ததுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதும் இதனால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தமிழகத்தில் ரூ. 2,250 கோடி முதலீடு..உலக அரங்கில் மேக் இன் தமிழ்நாடு!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் நீண்ட கால முதலீடு திட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும், குறைந்த கால முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்ட் சரியானது அல்ல என்றும் ஏற்கனவே என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட்களில் நாம் வாங்கும் NAVமதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதும் குறுகிய கால முதலீட்டில் நாம் விற்கும்போது NAVவிலை குறைவாக இருந்தால் நான் போட்ட முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட் உகந்தது என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.
நீண்டகால முதலீடு
அதேபோல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் NAVஏற்ற இறக்கங்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் நிதி இலக்குகள் உங்களை லாபத்துடன் அழைத்துச் செல்கிறது என்பதில் மட்டுமே கவனம் கொண்டு NAVஇறங்கினாலும் ஏறினாலும் முதலீட்டை தொடர்ந்து செய்ய வேண்டும்.
நீண்ட கால பயணம்
ஒரு நீண்ட சாலை பயணம் செய்யும்போது உங்களின் வேகம் குறித்து கவலைப்பட மாட்டீர்கள் அல்லவா? இலக்கை எப்படி அடைவது என்பதில் மட்டுமே கவலைப்படுவீர்கள். சாலையில் இருக்கும் சிறு சிறு மேடு பள்ளங்கள் உங்களது வேகத்திற்கு தடையாக இருக்கலாம், சில நேரம் உங்கள் பயணத்தை நிறுத்த வேண்டிய நிலைகூட ஏற்படலாம். ஆனால் சரியான நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதை மட்டும் தான் நீங்கள் சிந்திப்பீர்கள் என்றால் நிச்சயம் இலக்கை அடைந்துவிட முடியும்.
ஏற்ற இறக்கங்கள்
அதுபோல்தான் மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு என்பது நீண்டகால சாலை பயணத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதுபோல் NAVமதிப்பில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வந்தால் ஏற்ற இறக்கங்களே நமக்கு லாபமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
nav மதிப்பு
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு NAVயின் ஏற்ற இறக்கங்கள் நல்ல ரிட்டர்ன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அனைத்து பொருளாதார முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் ஏற்ற இறக்கம் அவற்றைவிட வித்தியாசமானது ஆகும்.
லாபம்
எனவே சந்தையில் ஏற்படும் மாற்றம், NAVக்களின் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை தான் தருமே தவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். நீண்ட காலத்தில் கூட்டு வட்டி முறையில் அது தரும் மொத்த ரிட்டர்களில் மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும்.
Why should one not be bothered by volatility in mutual funds?
Why should one not be bothered by volatility in mutual funds? | NAVக்களின் ஏற்ற இறக்கங்கள்.. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?