தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
இது இன்னும் சரிவினைக் காணுமா? அல்லது வழக்கம்போல மீண்டும் ஏற்றம் காணுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இன்று ஹாக்சன் ஹோல் சிம்போசியத்தில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
கோதுமை மாவு ஏற்றுமதிக்கு திடீர் தடை.. மத்திய அரசின் அறிவிப்பு ஏன்?
பலத்த எதிர்பார்ப்பு
குறிப்பாக மெதுவான வளர்ச்சி கண்டு வரும் அமெரிக்க பொருளாதாரத்தினை தூண்டும் விதமாக, அறிவிப்புகள் வரலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதன் காரணமாகவும் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக இந்த கூட்டத்தில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.
வட்டி அதிகரிக்கப்பட்டால்?
பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது டாலரை வலுப்படுத்தும். பத்திர சந்தையும் ஏற்றம் காண வழிவகுக்கும். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கும். இது தங்கம் விலை குறைய காரணமாக இருக்கலாம்.
வட்டி அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மெதுவான நிலையில் உள்ளது. ஆக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த வட்டியினை மத்திய வங்கி குறைக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வியாழக்கிழமையன்று வெளியான அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்தான தரவானது இரண்டாவது வாரமாக சந்தைகு சாதகமாக வந்துள்ளது. இது பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆக இது வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம்.
தேவை குறையலாம்
சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மந்த நிலையில் இருக்கும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்தின் தேவையினை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சர்வதேச அளவில் தங்கத்தினை அதிகம் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 2 டாலர்கள் குறைந்து, 1769.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் 0.30% அதிகரித்து, 19.117 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பினை இதில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 196 ரூபாய் அதிகரித்து, 51,629 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 527 ரூபாய் அதிகரித்து, 55,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படும் நிலையில், இது மீடியம் டெர்மில் மீண்டும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4840 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 38,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்த, 5242 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,936 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 52,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 61.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 613 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து , 61,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,400
மும்பை – ரூ.47,510
டெல்லி – ரூ.47,660
பெங்களூர் – ரூ.47,5630
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,400
gold price on 26th August 2022: gold prices struggling amid dollar steadies
gold price on 26th August 2022: gold prices struggling amid dollar steadies/ அடடே இது நல்ல விஷயமாச்சே.. தங்கம் விலையில் தடுமாற்றம்.. இன்று எப்படியிருக்கு தெரியுமா?