அதிருப்தியில் சேலம் திமுக எம்பி பார்த்திபன்! மனக்குமுறலை கொட்டி தீர்த்தார்!  

சேலம் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் ஆர் பார்த்திபன். இவரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பதில்லை எனவும், தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். 

முன்னதாக இவருடைய எம்பி நிதியிலிருந்து நிதி ஒதுக்கினாலும் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குமுறலை ட்விட்டரில் கொட்டி தீர்த்துள்ளார்.

அவருடைய பதிவில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது எனவும், அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத்தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும்!

மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார். என்னை புறக்கணிப்பது, எனக்கு வாக்களித்த 20 இலட்சம் மக்களையும் புறக்கணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பதனை அனைவரும் அறிந்த ஒன்று, இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” எனவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.