அரசு ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வங்கியில் சம்பள கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஏற்கனவே வைத்து இருந்தால் அந்த கணக்கை மூடிவிட வேண்டும் என்றும் உத்தரவு வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநில அரசின் இந்த உத்தரவு பிரபல தனியார் வங்கி ஹெச்டிஎப்சி வங்கி குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்டிஎப்சி வங்கியில் அரசு ஊழியர்கள் வைத்துள்ள சம்பள கணக்கை ஏன் மூட வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ரூ.7300 கோடியில் புதிய ஆலை. சுசுகி மோட்டார் நிறுவனத்தின் வேற லெவல் திட்டம்!
எச்டிஎஃப்சி வங்கி
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎஃப்சி வங்கியில் அரசு ஊழியர்கள் தங்களது சம்பள கணக்குகளை தொடங்கக்கூடாது என்றும் ஏற்கனவே தொடங்கி இருந்தால் அதை மூடிவிட்டு வேறு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசு
பஞ்சாப் மாநில அரசின் நீர்வளத்துறை இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில் நீர்வளத் துறையின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் உள்பட மூத்த அதிகாரிகளுக்கு மெமோ ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் அனைத்து ஊழியர்களும் எச்டிஎஃப்சி வங்கியின் கணக்குகளை உடனடியாக மூடிவிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிதித்துறை முதன்மைச் செயலாளர்
பஞ்சாப் அரசின் நீர்வளத்துறையின் இந்த அறிக்கை போன்று நிதித்துறை முதன்மை செயலாளரும் அனைத்து துறை செயலாளருக்கும் அனுப்பி உள்ளதாகவும், அதில் அனைத்து துறை ஊழியர்களும் எச்டிஎஃப்சி வங்கி யில் உள்ள கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரணம் என்ன?
பஞ்சாப் அரசு எச்டிஎஃப்சி வங்கி மீது இந்த அளவு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது பஞ்சாப் நீர்வளத்துறைக்கு எச்டிஎஃப்சி வங்கி ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே தான் அந்த வங்கியில் அரசு ஊழியர்கள் யாரும் கணக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுரங்க ஒப்பந்ததாரர்கள்
எச்டிஎஃப்சி வங்கி பஞ்சாப் மாநில நீர்வளத்துறையின் சுரங்க ஒப்பந்ததாரர்களுக்கு சில உத்தரவாதங்களை வழங்கியதாகவும், ஆனால் அந்த உத்தரவாதங்களை எச்டிஎஃப்சி வங்கி பின்பற்றவில்லை என்றும், அதனால் தான் இந்த நடவடிக்கை என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எச்டிஎஃப்சி விளக்கம்
“எச்டிஎஃப்சி வங்கி இதுகுறித்து விளக்கமளித்தபோது, ‘வங்கி உத்தரவாதங்களின் விதிமுறைகளின்படி, அதன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது என்றும், சுரங்க ஒப்பந்ததாரர்கள் சார்பாக வழங்கப்படும் வங்கி உத்தரவாதங்கள் தொடர்பான விஷயத்திலும் வங்கி எல்லா நேரங்களிலும் அதன் அனைத்து கடமைகளையும் உடனடியாக நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளது.
Government employees asked to close all accounts in HDFC Bank, here’s why
Government employees asked to close all accounts in HDFC Bank, here’s why | அரசு ஊழியர்கள் இந்த வங்கியில் சம்பள கணக்கு வைக்க கூடாது.. அதிரடி உத்தரவு!