சென்னை : சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர் தான் நடிகர் அருள்நிதி ஸ்டாலின். இவருடைய முதல் படமே நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
அதன்பிறகு அருள்நிதி படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டும் வெற்றிப்படத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
அவ்வாறு அருள்நிதிக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்த ‘D’ சென்டிமென்ட் திரைப்படங்களை பற்றி பார்க்கலாமா ?
அருள்நிதி
வம்சம், உதயன், மௌனகுரு, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம், போன்ற பல படங்களில் நடித்து வெற்றி நாயகனாக இருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. மற்ற கதைகளை விட க்ரைம் திரில்லர் கதைகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வம்சம் முதல் படமாக இருந்தாலும் அப்படத்தில் கிராமத்து சாயலில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் சுனைனா நடித்திருந்தார். பாசம், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த வம்சம் படம் அருள்நிதிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
டிமான்ட்டி காலனி
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி திரைப்படம். இப்படத்தில் அருள்நிதி,ரமேஷ் திலக்,சனத் ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகவும் த்ரில்லிங்காகவும், பரபரப்பை ஏற்படுத்தும் காட்சிகள் என படம் மிரட்டலாக இருந்து, திரையரங்கில் வசூலை வாரிக்குவித்து.
தேஜாவு
சமீபத்தில் டி பிளாக் என்ற படத்தில் நடித்திருந்தார். எரும சாணி யூடியூபவர் விஜய் ராஜேந்திரன் இத்திரைப்படத்தை இயக்கிஇருந்தார். இந்த படம் ஒரு த்ரில்லிங்காக இருந்தது. அதே போல, தேஜாவு என்ற திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து மதுபாலா போன்ற பலர் உள்ளனர். அருள்நிதியின் பிறந்தநாள் அன்று வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு பெண் கடத்தலை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக அருள்நிதி நடித்திருந்தார்.
டைரி
ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்த டைரி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அருள்நிதியின் முந்தைய படங்களைப் போல ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக டைரி படம் அமைந்துள்ளது. .
‘D’ சென்டிமென்ட்
டைரி படத்தில் அருள்நிதி வீரப்பன் மாதிரி மீசை மிரட்டலான லுக், போலீஸ் கட்டிங், கம்பீரமான உடல், வலிந்து சிரிக்கத் தெரியாத உடல்மொழி என தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் பதியவைத்துள்ளார் அருள் நிதி. அருள்நிதிக்கு கைகொடுக்கும் வழக்கமான ‘D’ சென்டிமென்ட் படங்களைப் போல இந்த படமும் அவருக்கு கைகொடுத்துள்ளது.