ஆர்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்.. முதலீட்டாளார்களே செம சான்ஸ்.. !

ரிசர்வ் வங்கி 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநில அரசுகளின் பத்திரங்களை ஆக்ஸ்ட் 29 அன்று ஏலம் விட உள்ளது.

இந்த ஏலமானது இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூசன் (இ-குபேர்) மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாநில அரசுகள் ஏலத்தில் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யும் வட்டி விகிதத்தினை செலுத்தும். இந்த பத்திரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 30 அன்றும் வட்டி விகிதம் அளிக்கப்படும்.

வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன..?

எந்தெந்த மாநிலங்கள்

எந்தெந்த மாநிலங்கள்

இந்த ஏலத்தில் தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியான, பீகார், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பர்க்கப்படுகின்றது. இந்த ஏலத்தில் போட்டியான, போட்டி அல்லாத ஏலம் குபேர் மூலம் நடக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் இந்த பத்திரங்கள் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையில் முதிர்வு காலத்தினை கொண்டிருக்கும்.

 

எவ்வளவு திரட்டவுள்ளன?

எவ்வளவு திரட்டவுள்ளன?

இந்த ஏலத்தின் மூலம் ஆந்திர பிரதேச அரசு 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், பீகார் அரசு 1,000 கோடி ரூபாயும், ஹரியானா 1,500 கோடி ரூபாய் திரட்டலாம் என்றும், கேரளா 3000 கோடி ரூபாய் திரட்டலாம் என்றும், பஞ்சாப் அரசு 2,500 கோடி ரூபாய் திரட்டலாம் என்றும், தமிழ் நாடு அரசு 4,000 கோடி ரூபாய் திரட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?
 

எப்படி விண்ணப்பிப்பது?

போட்டியற்ற ஏல வசதி மூலம், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் ஆர்பிரி ரீடெயில் டைரக்ட் என்ற https://rbiretaildirect.org.in/#/ தளத்தின் மூலம் ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுப் பத்திரங்கள் சட்டம், 2006 மற்றும் அரசுப் பத்திரங்கள் ஒழுங்குமுறைகள், 2007 ஆகியவற்றின் விதிகளால் இந்த அரசு பத்திரங்கள் நிர்வகிக்கப்படும்.

 

 எப்போது ஏலம்?

எப்போது ஏலம்?

ஆகஸ்ட் 29 அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் போட்டி ஏலத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இதே போட்டி அல்லாத ஏலத்திற்கு காலை 10.30 மணி முதல் 11.00 மணிக்குள் சம்பர்பிக்கப்படிருக்க வேண்டும். ஒரு வேளை இந்த சிஸ்டம் தோல்வியுற்றால் மட்டும், செயல்முறை ஏலம் நடத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நல்ல சான்ஸ்

நல்ல சான்ஸ்

இந்த ஏலத்தில் ஒரு முதலீட்டாளார் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டி ஏலங்களை ஒரே/ வெவ்வேறு விலைகளில் சமர்பிக்கலாம். இதன் மூலம் ஏலத்தில் வெற்றி காண்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மொத்தத்தில் பாதுகாப்பான முதலீட்டிற்கு இது ஒரு சிறந்த வழி என்றும் கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI to auction state govt securities worth Rs.14,000 crore on coming August 29, 2022: how to apply?

RBI to auction state govt securities worth Rs.14,000 crore on coming August 29, 2022: how to apply?/ஆர்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்.. முதலீட்டாளார்களே செம சான்ஸ்.. !

Story first published: Friday, August 26, 2022, 12:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.