சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 11SE போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து சற்று விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் நோட் 11SE என்ற போனை அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி நோட் 11 சீரிஸ் போன்களின் வரிசையில் மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போன் இது. வரும் 31-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.43 இன்ச் திரை அளவு கொண்ட AMOLED டிஸ்பிளே.
- மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட்.
- ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்.
- பின்பக்கத்தில் நான்கு கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
- 13 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.
- ட்யூயல் சிம் கார்ட், 4ஜி இணைப்பு வசதி கொண்டுள்ளது.
- டைப் சி சார்ஜிங் போர்ட்.
- 5,000mAh திறன் கொண்ட பேட்டரி.
- 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி.
- நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி.
- இதன் விலை ரூ.13,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get promising all-round performance with #RedmiNote11SE
MP Quad Camera
@MediaTek Helio G95 Processor
Super AMOLED Display
33W Fast Charging
Stunning Color VariantsFirst Sale on 31st August. Starts at an unbelievable price of ₹12,499! pic.twitter.com/gHTlFgNglF
— Redmi India (@RedmiIndia) August 26, 2022