இந்தியாவில் ஒரே நாளில் 10,256 பேருக்கு கொரோனா… 68 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 10,256 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176ஆக உயர்ந்தது.

* புதிதாக 68 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,556ஆக உயர்ந்தது.

* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,70,913ஆக உயர்ந்துள்ளது.

* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90,707 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.61% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.20% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 2,11,13,94,639 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,60,292  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.