வாஷிங்டன்-அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்கள் மீது, இன வெறி தாக்குதல் நடத்திய மெக்சிகோவைச் சேர்ந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்துக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பெண்கள் வந்திருந்தனர். அங்கு வந்த வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த பெண், இந்திய பெண்களைப் பார்த்ததும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அந்த பெண் கூறியதாவது:அமெரிக்காவை அழிப்பதற்காகவே இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்கள்.
அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் நடமாட்டம் தான் உள்ளது. இந்தியாவில் வசிக்க வேண்டியது தானே; எதற்காக இங்கு வருகிறீர்கள்; உங்கள் நாட்டுக்கு திரும்பச் செல்லுங்கள்.இவ்வாறு அந்த பெண் கூறினார். மேலும், இந்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்தவும் முயன்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, மெக்சிகோ பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்திய பெண்கள் மீது இன வெறி தாக்குதல் நடத்தப்பட்டது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement