சர்வதேச வணிகம் மற்றும் நிதி உலகம் ஜாக்சன் ஹோல் சிம்போசியம் பற்றி அதிகளவில் பேசி வருகிறது. இதில் என்ன இருக்கிறது..? ஏன் எல்லோரும் இதைப் பற்றிப் பேசி வருகின்றனர்..?
3 நாள் நடக்கும் இந்த ஜாக்சன் ஹோல் சிம்போசியம் 100-க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள், நிதி வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் மற்றும் பிறர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாகும்.
ஆனால் ஜாக்சன் ஹோல் சிம்போசியம் என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதம் 75 புள்ளிகள் உயர்வு.. இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
ஜாக்சன் ஹோல் என்பது என்ன..?
ஜாக்சன் ஹோல் என்பது அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் உள்ள ஒரு அழகான மலைப் பள்ளத்தாக்கு. மலையேறுபவரான ஜாக் டேவிஸின் பெயர் தான் இந்த மலைப் பகுதிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு ஜாக்சன் ஹோல் சிம்போசியம் எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைமையில் நடக்கும் இந்த ஜாக்சன் ஹோல் சிம்போசியம் எனப்படும் வருடாந்திர பொருளாதார ஆலோசனை கூட்டம் மூன்று நாள் நடக்க உள்ளது. அமெரிக்க நேரப்படி 25 ஆம் தேதி துவங்கிய இக்கூட்டம் 27ஆம் தேதி வரையில் நடக்க உள்லது.
45வது வருடாந்திர கூட்டம்
1978 ஆம் ஆண்டு முதல், கன்சாஸ் நகரத்தின் பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்கா மற்றும் உலகப் பொருளாதாரங்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறித்து ஆலோசனை செய்யும் ஒரு முக்கியமான கூட்டம் தான் ஜாக்சன் ஹோல் சிம்போசியம். தற்போது நடப்பது 45வது கூட்டமாகும்.
ஜாக்சன் ஹோல் சிம்போசியம்
இந்த 3 நாள் ஜாக்சன் ஹோல் சிம்போசியம் கூட்டத்தில் 2வது நாளான சனிக்கிழமை மாலை 7.30க்கு அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், சமீபத்தில் அமெரிக்காவில் நான்கு தசாப்த கால உயர்வை எட்டிய பணவீக்கம் பற்றிப் பேச உள்ளார். இந்தக் கூட்டம் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நடவடிக்கைகளின் ப்ளூ ப்ரின்ட் கிடைக்கும்.
ஜெரோம் பவல்
ஜாக்சன் ஹோல் சிம்போசியம் கூட்டத்தில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல்-ன் பேச்சை கேட்டக விரும்புவோர் KansasCityFed யூடியூப் சேனலில் பார்க்க முடியும்.
அமெரிக்கா ஜிடிபி
2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது – 0.6 சதவிகிதமாக உள்ளது. வருடாந்திர அடிப்படையிலான இந்த அளவீடு முன்பு -0.9 சதவீதமாகச் சரியும் என எதிர்பார்க்கப்பட்டது.
Jackson Hole Symposium: How and when to watch; Why its important in the world of business
Jackson Hole Symposium: How and when to watch; Why its important in the world of business உலகமே திரும்பி பார்க்கும் Jackson Hole Symposium.. ஏன் இவ்வளவு முக்கியம்..?