ஐரோப்பாவை வீழ்த்த தினமும் 10 மில்லியன் டாலர் செலவு செய்யும் ரஷ்யா..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணமாக ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் தடை விதித்த நிலையில், இதற்குப் பழி வாங்கும் விதமாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளா ஜெர்மனி உட்படப் பல நாடுகளுக்கான எரிவாயு சப்ளை-ஐ நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய எரிசக்தி சந்தைகளை முடக்குவதற்காக ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டிய எரிவாயுவைத் தடுத்த நிறுத்த தினமும் 10 மில்லியன் டாலர் அளவிலான எரிவாயுவை வெறுமென எரித்து வருகிறது.

இல்லையெனில் இந்த இயற்கை எரிவாயு ஜெர்மனிக்குச் செல்லும் என்பதற்காகவே ரஷ்யா இதைச் செய்து வருவதாகப் பிபிசி தெரிவித்துள்ளது.

Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளை முடக்க வேண்டும், தவிக்க விட வேண்டும் என்ற ஓரே காரணத்திற்காக உயர்த்துவதற்கு முன்பு ஜெர்மனிக்குச் சென்றிருக்கும் இயற்கை எரிவாயுவை ரஷ்யா பெருமளவில் எரித்து வருகிறது.

10 மில்லியன் டாலர் எரிவாயு

10 மில்லியன் டாலர் எரிவாயு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ஒரு ஆலை ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் டாலர் எரிவாயுவை எரிக்கிறது என்று ரைஸ்டாட் எனர்ஜியின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த எரிவாயு இதற்கு முன்பு ஜெர்மனிக்கு நார்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைன் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டு இருந்ததை குறிப்பிடத்தக்கது.

சப்ளை குறைப்பு
 

சப்ளை குறைப்பு

ரஷ்யா ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை வருடாந்திர பராமரிப்புப் பணிகள் என்று அறிவித்து 10 நாள் மொத்தமாக முடக்கியது, அதன் பின்பு ஜூலை மாதத்தில் இருந்து Nord Stream 1 இன் சப்ளை திறனை வெறும் 20% ஆகக் குறைத்தது. புதன் முதல் மூன்று நாட்கள் திட்டமிடப்படாத பராமரிப்புக்காகப் பைப்லைனை முழுவதுமாக மூட திட்டமிட்டுள்ளது ரஷ்யா.

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்தின் எல்லைக்கு அருகில், Nord Stream 1 பைப்லைன் தொடங்குவதற்கு அருகிலுள்ள போர்டோவாயா திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையில் தினமும் 10 மில்லியன் டாலர் அளவிலான 4.34 மில்லியன் கன மீட்டர் எரிவாயு வெறுமென் காற்றில் எரிக்கப்பட்டு வருகிறது என Rystad பகுப்பாய்வு காட்டுகிறது.

ஜெல்ஜியம் பிரதமர்

ஜெல்ஜியம் பிரதமர்

ஐரோப்பாவில் குளிர்காலம் வர உள்ள நிலையில் எரிவாயு தேவை அதிகரித்துள்ளது, இந்த நிலையில் ரஷ்யாவின் செயல்பாடுகள் உலக நாடுகளின் தலைவர்களைக் கோபப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள். ஐரோப்பாவில் அடுத்த 5 முதல் 10 குளிர்காலங்கள் கடினமாக இருக்கும் என்று பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரூ கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia burning $10 million a day of natural gas to cut off gas supply to Germany

Russia burning $10 million a day of natural gas to cut off gas supply to Gemany | ஐரோப்பாவை வீழ்த்த தினமும் 10 மில்லியன் டாலர் செலவு செய்யும் ரஷ்யா..!

Story first published: Friday, August 26, 2022, 19:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.