Congress Vs Ghulam Nabi Azad: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் செல்வாக்குடன் இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து திடீர் என விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு 5 பக்க கடிதத்தை எழுதியுள்ளர. அந்த கடிதத்தில், குறிப்பாக ராகுல் காந்தியின் செயல்பாடுகளை ஆசாத் கடுமையாக சாடியுள்ளார். மேலும், கட்சியின் தேர்தல் வியூக செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, 2013ல் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, முன்பு இருந்த ஆலோசனை, திட்டமிடல் என அனைத்து அமைப்புகளும் அவரால் தகர்க்கப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வர முடியாத நிலையை எட்டியுள்ளது எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.