வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடும் மாணவர்கள் மாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள கல்லூரி, பல்கலைகழகங்களில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மாணவர் சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இம்மாநிலத்தில் கல்லூரி, பல்கலைகழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து ஜெய்ப்பூரில் கல்லூரி ஒன்றில் நடந்த மாணவர் சங்க தேர்தலையொட்டி பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் மாணவர்கள் ஓட்டுப்போட வந்த மாணவிகளின் காலில் விழுந்து ஓட்டு கேட்டனர். இதில் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் மாணவர் ஒருவர் மாணவ-மாணவிகளின் கால்களை பிடித்து கெஞ்சி ஓட்டுப்போடும்படி கேட்டு கொண்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இம்மாநிலத்தில் ஏ.பி.வி.பி., மற்றும் என்.எஸ்.யூ.ஐ, ஆகிய இரு மாணவர் அமைப்புகளுக்கிடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. சிலர் சுயேச்சையாகவும் பலர் களம் இறங்கி உள்ளனர். சிலர் அரசியல் பின்புலம் உள்ளவர்களின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர் இன்று ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement