கேரளாவில் அதானிக்கு எதிராக திடீர் போராட்டம்.. ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே அதானி குழுமத்தால் கட்டப்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விழிஞ்சம் சர்வதேச டிரான்ஷிப்மென்ட் டீப்வாட்டர் பல்நோக்கு துறைமுகம் கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தால் ரூ.7,525 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால் மிகப்பெரிய சரக்கு கப்பல்களை கையாள முடியும் மற்றும் சர்வதேச கப்பல் பாதையில் ஒரு முக்கிய புள்ளியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் ஏன் வெடித்துள்ளது என்பதை பார்ப்போம்.

தனிநபர் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.. இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

மீனவர்கள் போராட்டம் ஏன்?

மீனவர்கள் போராட்டம் ஏன்?

அதானி நிறுவனம் கட்டி வரும் துறைமுகம் காரணமாக தெற்கு கேரளாவில் உள்ள மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். இந்த துறைமுகம் கட்டுவதால் செயற்கையான கடல் சுவர்கள் அழிந்து கடலோர அரிப்புக்கு வழிவகுத்துவிடும் என்றும், இதனால் நூற்றுக்கணக்கான மீனவர்களின் வீடுகளுக்கு ஆபத்து என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

எனவே விழிஞ்சம் துறைமுகம் அமைக்கும் பணியை நிறுத்தி, முறையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக கடந்த திங்கள்கிழமை, மீனவர்கள் விழிஞ்சம் துறைமுகத்தை முற்றுகையிட்டதோடு, தங்கள் படகுகள் மூலம் துறைமுக கட்டுமான பகுதியை சுற்றி வளைத்தனர்.

காங்கிரஸ் ஆதரவு
 

காங்கிரஸ் ஆதரவு

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த துறைமுக கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டியபோது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தது. கடந்த வாரம் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று, மீனவர்களிடம் தன்னுடைய ஆதரவை மீண்டும் உறுதி செய்தார்.

பேச்சுவார்த்தை தோல்வி

பேச்சுவார்த்தை தோல்வி

அதானி நிறுவனத்தின் துறைமுகம் கட்டுவதற்கு எதிராக நடைபெறும் மீனவர்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது. மேலும் சமீபத்தில் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் அமைச்சர்கள் ஆண்டனி ராஜு, வி அப்துரஹிமான் ஆகியோரை சந்தித்து, கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கேரள அரசு என்ன சொல்கிறது

கேரள அரசு என்ன சொல்கிறது

கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து சமீபத்தில் சட்டசபையில் கூறியபோது, ‘பாதிக்கப்படும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வாடகை வீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், வாடகை நிர்ணயம் உள்ளிட்ட பணி திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கடலோர அரிப்பு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகள் காரணமாக இடம்பெயரும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.2,450 கோடி மதிப்பிலான திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?

ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?

மீனவர்களின் தொடர் போராட்டம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் ஆதரவு காரணமாக கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் ரூ.7,525 கோடி செலவில் கட்டி வரும் துறைமுகம் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Why Kerala Fisherfolk Are Protesting Against The Adani-Backed Vizhinjam Port Construction

Why Kerala Fisherfolk Are Protesting Against The Adani-Backed Vizhinjam Port Construction | கேரளாவில் அதானிக்கு எதிராக திடீர் போராட்டம்.. ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?

Story first published: Friday, August 26, 2022, 7:18 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.