சரிவில் தள்ளாடும் அமெரிக்க பொருளாதாரம்.. 2 காலாண்டாக மைனஸ்.. அப்போ ரெசிஷன் உறுதியா..?

அமெரிக்கப் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மைனஸ் அளவில் இருந்தாலும் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட அளவுக்கு இல்லை என்பது அமெரிக்க முதலீட்டுச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டுச் சந்தைக்கும் நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஜூன் காலாண்டில் அமெரிக்காவின் வலிமையான ஏற்றுமதிகள் மற்றும் செலவினங்கள் மூலம் பொருளாதாரத்தின் சரிவு பெரிய அளவில் மீண்டு உள்ளது.

ஜூன் காலாண்டில் கணிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவான சரிவை பதிவு செய்துள்ளது மட்டும் அல்லாமல், மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.

அமெரிக்க அதிபரின் கல்விக்கடன் ரத்து அறிவிப்பு.. யார் யாரெல்லாம் பயன் பெறுவார்கள்?

அமெரிக்க ஜிடிபி

அமெரிக்க ஜிடிபி

2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது – 0.6 சதவிகிதமாக உள்ளது. வருடாந்திர அடிப்படையிலான இந்த அளவீடு முன்பு -0.9 சதவீதமாகச் சரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் ஏற்றுமதியில் பதிவான உயர்வு ஆகியவை பெரிய அளவிலான பலன் கொடுத்துள்ளது.

மார்ச் காலாண்டு

மார்ச் காலாண்டு

மார்ச் காலாண்டில் பணவீக்கத்தின் மோசமான உயர்வால் விலைவாசி உயர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்தது. இதன் எதிரொலியாக மார்ச் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் -1.6 சதவீதமாகச் சரிந்தது உலக நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மைனஸ் அளவு
 

மைனஸ் அளவு

இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் இரண்டு காலாண்டுகளாகத் தொடர்ந்து மைனஸ் அளவிலேயே இருக்கும் காரணத்தால் ரெசிஷனில் அதிகாரப்பூர்வமாகத் தள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பொருளாதார வல்லுனர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர்.

ரெசிஷன்

ரெசிஷன்

அமெரிக்கா பொருளாதாரம் உட்படப் பல நாடுகளின் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்லும் அபாயம் இருப்பது உண்மை தான் ஆனால் தற்போதைய சந்தை அடிப்படைகளை வைத்து பார்க்கும் போது இந்த 2 காலாண்டு அடிப்படைகள் கட்டாயம் பொருந்தாது எனக் கூறுகின்றனர். இதனால் அமெரிக்கா பொருளாதாரம் அதிகாரப்பூர்வமாக இன்னும் ரெசிஷனில் விழவில்லை.

Ian Shepherdson அறிக்கை

Ian Shepherdson அறிக்கை

அமெரிக்காவின் ஜூன் காலாண்டில் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு சந்தை, நுகர்வோர் சந்தை ஆகியவை பெரும் சரிவில் இருந்து மீண்டு வரும் காரணத்தால், அமெரிக்க அரசின் வருமானமும் அதிகரித்துள்ளது என Ian Shepherdson அவர்கள் Pantheon Macroeconomics அறிக்கையில் எழுதியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

USA GDP contracted to 0.6 percent in june quarter, consecutive fall for two quarters

USA GDP contracted to 0.6 percent in june quarter, consecutive fall for two quarters மைனஸ்-ல் தள்ளாடும் அமெரிக்கப் பொருளாதாரம்.. அப்போ ரெசிஷன் உறுதியா..?

Story first published: Friday, August 26, 2022, 13:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.