கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பதும் இதனால் சுற்றுலா துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
தற்போது விமானங்கள் ஓரளவுக்கு முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு சில சுற்றுலா பகுதிகளுக்கு விமானம் இயக்கப்படாமல் உள்ளது.
அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றான சிம்லாவுக்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 6 முதல் மீண்டும் விமானங்கள் சிம்லாவுக்கு இயக்கப்படும் என்ற அறிவிப்பு சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
கேரளாவில் அதானிக்கு எதிராக திடீர் போராட்டம்.. ரூ.7,525 கோடி திட்டம் என்ன ஆகும்?
மீண்டும் சிம்லாவுக்கு விமானம்
டெல்லியில் இருந்து சிம்லாவுக்கு விமான சேவை இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அலையன்ஸ் ஏர் ஏர்லைன்ஸ் செப்டம்பர் 6 முதல் சிம்லாவிற்கு அருகிலுள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்திலிருந்து விமான சேவையை மீண்டும் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து மட்டுமின்றி சிம்லாவுக்கு தர்மசாலா மற்றும் குலுமணாலி ஆகிய பகுதியில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
அலையன்ஸ் ஏர்
அலையன்ஸ் ஏர் ஒரு புதிய ஃபிக்ஸட் விங் ஏர் கிராஃப்ட் ஏடிஆர் -42 (600) என்ற விமானத்தை வாங்கியுள்ளது. இந்த புதிய விமானம் சுற்றுலா துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செப்டம்பர் 6 ஆம் தேதி இயக்கப்படும் என்று அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் ஆர்.டி.திமன் கூறியுள்ளார். சிம்லாவுக்கு அலையன்ஸ் ஏர் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
சுற்றுலாத்துறை
கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு சிம்லாவுக்கு விமானங்கள் மீண்டும் இயக்குவது நலிவடைந்துள்ள சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆர்.டி.திமன் மேலும் தெரிவித்தார்
ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை
சிம்லாவில் இருந்து விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுவதால் சிம்லாவில் உள்ள ஓட்டல்களில் இனி பிசினஸ் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாட்களும் விமானம்
சிம்லா மற்றும் டெல்லி இடையே 7 நாட்களும் விமானம் இயக்கப்படும் என்றும், அதே வேளையில், சிம்லா-குலுமணாலியை இணைக்கும் விமானம் வாரத்தில் நான்கு நாட்களும், சிம்லா மற்றும் தர்மசாலா இடையே வாரத்திற்கு மூன்று முறையும் இயக்கப்படும் என்றும் அலையன்ஸ் ஏர் தெரிவித்துள்ளது.
ஹெலி டாக்ஸிகள்
ஹெலி டாக்ஸிகள் மூலம் சிம்லாவை இணைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்தது என்றும், இதனால் விமான சேவை இல்லாததால் உயர்நிலை சுற்றுலா பயணிகளின் வருகை பாதித்தது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிம்லாவில் உள்ள சில சொகுசு ஹோட்டல்கள் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டால் தங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
Flights To Shimla From September 6 As Air Connectivity Restored After Two Years
Flights To Shimla From September 6 As Air Connectivity Restored After Two Years | சிம்லா சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. சுற்றுலாத்துறைக்கு கொண்டாட்டம்!