சீனாவை எதிர்கொள்ள தயாரான தைவான்…பலமடங்கு உயர்வுடன் வெளியான பாதுகாப்பு பட்ஜெட்!


தைவானின் பாதுகாப்பு இராணுவ செலவினங்களில் 14 சதவிகிதம் உயர்வு.


2022ம் ஆண்டில் 980 சீன போர் விமானங்கள் தைவான் வான்பரப்பில் அத்துமீறல்.

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு இராணுவ செலவினங்களில் 14 சதவிகிதம், ஆண்டுக்கு ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிப்பதற்கான திட்டங்களை தைவான் அறிவித்துள்ளது.

தைவானை சீனா தனது இறையாண்மை பிரதேசமாக அறிவித்து வரும் நிலையில், தைவானோ தன்னை சுகந்திர பிரதேசமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகை மற்றும் ஐந்து பேர் கொண்ட அமெரிக்க சட்டமியற்றும் குழுவின் வருகை ஆகியவற்றை தொடர்ந்து, தைவானை சுற்றி சீனா பெரிய அளவிலான போர் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

சீனாவை எதிர்கொள்ள தயாரான தைவான்...பலமடங்கு உயர்வுடன் வெளியான பாதுகாப்பு பட்ஜெட்! | Taiwan Record Defence Budget Spending China WarAFP

தீவிற்குள் கடந்த 2021 இல் சுமார் 970 சீனப் போர் விமானங்கள் அதன் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவியதை தைவான் பதிவு செய்தது, இந்த எண்ணிக்கையானது 2022ல் ஏற்கனவே 980 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 360க்கும் மேற்பட்ட ஊடுருவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வியாழன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எதிரியின் அச்சுறுத்தல் பற்றி பட்ஜெட் முழுமையாக பரிசீலித்தாக தெரிவித்து இருந்தது. 2023 -ஆம் ஆண்டுக்கான இராணுவ வரவுசெலவுத் திட்டத்தில், தைவான் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனாவிற்கு தைவான் சமிக்ஞையை தெரிவித்தது.

சீனாவை எதிர்கொள்ள தயாரான தைவான்...பலமடங்கு உயர்வுடன் வெளியான பாதுகாப்பு பட்ஜெட்! | Taiwan Record Defence Budget Spending China WarAFP

இந்தநிலையில் சீனாவின் இராணுவத்தால் தைவான் தீவு மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றினால் தைவானின் இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) அரசியல் விஞ்ஞானி சோங் ஜா இயன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தைவான் வியாழன் அன்று (ஆகஸ்ட் 25) அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பு செலவினங்களில் 14 சதவிகிதம், ஆண்டுக்கு ஆண்டு 19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிப்பதற்கான திட்டங்களை .சமிக்ஞையாக அறிவித்துள்ளது.

இவை 2017ம் ஆண்டு முதல் 4 சதவிகிதத்திற்கும் குறைவான முந்திய வருடாந்திர செலவின வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் கூர்மையான உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் செய்திகளுக்கு: லண்டன் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்…பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.