சென்னை: தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி, மாங்காடு, திருவேற்காடு, குன்றத்தூர், செம்பரபாக்கம், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம் ஆகிய இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.