வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு வரும் 7 ம் தேதி வெளியாக உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., – ஆயுஷ் படிப்புகள் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி அவசியம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17 ல் நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது. தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது.நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில், தேர்வு நடந்தது. ஆனால், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என தெரியாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் இளநிலை நுழைவு மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் செப்., 7 ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஆக.,30க்குள் நுழைவுத்தேர்வுக்கான விடை குறிப்புகளும் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement