சோமேட்டோ முதலீட்டாளர்களே உஷார்.. அடுத்த பெரிய தலையின் பங்கு விற்பனை..!

இந்திய உணவு டெலிலரி நிறுவனமான சோமேட்டோ-வில் அமெரிக்கா டாக்ஸி சேவை நிறுவனமான உபர் டெக்னாலஜிஸ் வைத்திருக்கும் 7.8% பங்குகளைப் பிளாக் டீல் முறையில் விற்பனை செய்து தனது நீண்ட கால முதலீட்டை வெளியேற்றியது யாராலும் மறக்க முடியாது.

இதன் மூலம் சோமேட்டோ முக்கியமான முதலீட்டாளரை இழந்துள்ளது மட்டும் அல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவர்களுக்கு மற்றொரு முக்கிய முதலீட்டாளர் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

ஐபிஓ-வுக்குப் பின்பு ஒரு வருட லாக் இன் காலம் முடிந்த பின்பு டைகர் குளோபல், உபர் மற்றும் Moore Strategic Ventures ஆகியவை அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளது.

கைக்குழந்தை உடன் உணவு டெலிவரி செய்த சோமேட்டோ பெண் ஊழியர்..! டிரெண்டாகும் இன்ஸ்டா வீடியோ..!

சோமேட்டோ

சோமேட்டோ

சோமேட்டோ நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல முக்கியமான ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சிகோயா கேப்பிடல் நிறுவனம், மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே சோமேட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்த அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.

மறுசீரமைப்பு

மறுசீரமைப்பு

ஆனால் தற்போது சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் பல முன்னணி தனியார் முதலீட்டு நிறுவனங்களைத் தங்களது முதலீடுகளை மறுசீரமைப்புச் செய்ய நிர்ப்பந்தம் செய்துள்ளது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நஷ்டம் ஏற்படும் நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.

சிகோயா கேபிடல்
 

சிகோயா கேபிடல்

இதன் வாயிலாகச் சோமேட்டோ நிறுவனத்தின் 2 சதவீத பங்குகளைச் சிகோயா கேபிடல் இந்தியா ஒப்பன் மார்கெட் சந்தையில் விற்பனை செய்துள்ளது. சோமேட்டோ இதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கைகளின் படி சோமேட்டோ நிறுவனத்தில் சிகோயா 4.4 சதவீத பங்குகளைத் தற்போது வைத்திருக்கிறது.

10.52 சதவீத பங்குகள் விற்பனை

10.52 சதவீத பங்குகள் விற்பனை

சோமேட்டோ ஐபிஐ வெளியிடும் போது சிகோயா சுமார் 50.26 கோடி பங்குகள் என மொத்தம் 6.41 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 25 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 10.52 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.

 Fidelity Investments புதிய கூட்டாளி

Fidelity Investments புதிய கூட்டாளி

இதேவேளையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சோமேட்டோ மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையின் படி Fidelity Investments சோமேட்டோ நிறுவனத்தின் 5.06 சதவீத பங்குகளை ஒப்பன் சந்தையில் வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sequoia Capital sold 2 percent stake in Zomato after Tiger global, uber

Sequoia Capital sold 2 percent stake in Zomato after Tiger global, uber சோமேட்டோ முதலீட்டாளர்களே உஷார்.. அடுத்தப் பெரிய தலையின் பங்கு விற்பனை..!

Story first published: Friday, August 26, 2022, 19:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.