ஜி.யு.போப் குறித்த சர்ச்சை பேச்சு : ஆளுநருக்குக் குவியும் கண்டனங்கள்

டெல்லியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் ஆன்மிகத் தன்மையை சிதைக்கும் நோக்கில், இந்திய வரலாறு, இந்திய கலாச்சாரத்தை சிதைத்தனர். அதனால், காலனி ஆதிக்க மனோபாவத்துடன் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கியங்களை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். 

திருக்குறளை வாழ்வியல் நெறிகள் மட்டும் என்பது போல் இப்போது குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஆனால் அதில் ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் குறளில் உள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால் ஜி.யு போப் வேண்டுமென்றே தனது மொழிபெயர்ப்பில் ஆதிபகவன் என்பதை வெறும் முதன்மைக் கடவுள் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார் எனப் பேசினார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் குவிந்து வருகின்றன. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனக் குறிப்பிட்டுள்ளார். 

பழ.நெடுமாறன்வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், சங்க நூல்களிலும், அதையொட்டி எழுந்த திருக்குறளிலும் சமயம் என்ற சொல்லாட்சியோ, மோட்சம் என்ற ஆன்மிகத் தத்துவத்தைக் குறிக்கும் எத்தகைய சொல்லோ அறவே இடம்பெறவில்லை. திருக்குறளுக்கு வைதிக அடையாளத்தைச் சூட்டுவதற்கே ஆளுநர் முயற்சித்துள்ளார். தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.