டெல்லி அரசை கவிழ்க்க பாஜ ரூ.800 கோடி பேரம்: முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி அரசை கவிழ்க்க ஆபரேசன் தாமரை மூலம் பாஜ முயற்சித்து வருவதை தடுப்பது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்க மோடி தலைமையிலான பாஜவினர் தயாராக இருக்கிறார்கள். டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக மட்டும் வைத்துள்ள இந்த ரூ.800 கோடி ரூபாய் எங்கிருந்து பாஜவுக்கு வந்தது என்று நாட்டு மக்கள் அறிய விரும்புகிறார்கள். அந்தப் பணம் மாநில மக்களை பிழிந்து எடுத்த ஜிஎஸ்டியா? அல்லது பிஎம் கேர் பணமா? அல்லது மோடியின் நண்பர்கள் கொடுத்த பணமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.