தற்போது பல அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தனிநபர் கடன்களை வாரி வழங்கி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
தினந்தோறும் நமது செல்போனில் தனிநபர் கடன் வேண்டுமா? என வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கேட்பது சர்வசாதாரணமாகி வருகிறது.
இந்த நிலையில் தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
எந்த ஒப்புதலும் இனி தேவையில்லை.. 5ஜி சேவைக்காக விதிகள் மாற்றமா?
கால அவகாசம்
தனிநபர் கடன் பெறும் ஒருவர் அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை தேர்வு செய்வதில் முதல் கட்டமாக கவனமாக இருக்க வேண்டும். நீண்ட காலத்தை தேர்வு செய்வது தவணைத்தொகை குறைவாகவும், எளிதாக திருப்பி செலுத்துவதற்கான வசதியும் இருக்கும். ஆனால் குறுகிய காலத்தை தேர்வு செய்தால் நீங்கள் அதிக தவணைத்தொகை கட்ட வேண்டும். நீண்ட கால அவகாசத்துடன் கூடிய தனிநபர் கடன் சிறந்ததாக இருக்கும் என்பதே நிதி ஆலோசகர்களின் பரிந்துரையாக உள்ளது. நீண்ட கால அவகாசத்துடன் கூடிய தனிநபர் கடன் ஏன் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதை இங்கே காணலாம்
குறைந்த மாத தவணைத்தொகை
உங்கள் தனிநபர் கடனில் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகமாக தேர்வு செய்தால் மாத தவணைத்தொகை குறைவாக இருக்கும். மொத்த வட்டி மற்றும் அசல் என இரண்டும் நீண்ட காலத்திற்கு பிரிக்கப்படும். குறைந்த மாத தவணைத்தொகை உங்கள் மாதாந்திர செலவினங்களை நிர்வகிக்க மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்
அதிக கடன் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நீங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகையை கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சமாகும். உங்கள் நிதித்தேவை அதிகமாக இருந்தால் திருப்பி செலுத்தும் காலத்தை அதிகமாக தேர்வு செய்தால் கடன் தொகையை திருப்பி செலுத்த வசதியாக இருக்கும்.
கிரெடிட் ஸ்கோர்
குறைந்த மாத தவணைத்தொகையில் கடனை திருப்பி செலுத்தும்போது உங்கள் நிதி அழுத்தம் கணிசமாக குறைகிறது. தவணைத்தொகையை தவறாமல் செலுத்தவும், சரியான நேரத்தில் செலுத்தவும் முடியும் என்பதால் கிரெடிட் ஸ்கோரும் பாதிக்காமல் இருக்கும்.
கடனை முன்கூட்டியே செலுத்தும் திறன்
நீண்ட கடன் வாங்கியவர்கள் தங்களிடம் போதுமான பணம் இருந்தால், கடனில் ஒரு பகுதியை எளிதாக முன்கூட்டியே செலுத்தலாம். தனிநபர் கடன் பொதுவாக லாக்-இன் காலத்துடன் வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தலாம். இது மீதமுள்ள காலத்திற்கான கடன் தொகையை குறைக்கும். மேலும் குறைந்த மாதத்தவணைகள் மூலம் நீங்கள் அதை வசதியாக திருப்பிச் செலுத்தலாம். இருப்பினும், பெரும்பாலான நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதத்தை விதிக்கின்றன. எனவே, உங்கள் தனிநபர் கடனை முன்கூட்டியே செலுத்தும் முன் இந்த கட்டணங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
Why A Personal Loan With A Longer Repayment Term Could Be A Better Choice
Why A Personal Loan With A Longer Repayment Term Could Be A Better Choice | தனிநபர் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.. இந்த 5 விஷயங்கள் முக்கியம்!