`நான் அந்த வார்த்தைய தப்பான அர்த்தத்துல சொல்லல' வைரல் ட்வீட் குறித்து அம்பானி சங்கர்

காமெடி நடிகர் அம்பானி சங்கரின் ட்வீட் ஒன்று வைரலாகியுள்ளது. அதில் அவர், `ட்விட்டரில் வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய டேக் பண்றாங்க.. ‘ என பதிவு ஒன்றை தட்டிவிட்டிருந்தார். கூடவே அவரை டேக் செய்தவர் விபரத்தையும் அதில் தெரிவித்திருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டேன்.

சங்கர்

அஜித்தின் ‘ஜி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சங்கர். மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர். ‘ஆறு’, ‘பேரரசு’, ‘வல்லவன்’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்பட பல படங்களில் நடித்தவர். வடிவேலுவின் காமெடி டீமிலும் நடித்து வந்தவர். கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தின் மூலம் `அம்பானி சங்கர்’ ஆனார். தொடர்ந்து காமெடி கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

அந்த ட்வீட் குறித்து அம்பானி சங்கரிடம் கேட்டேன்.

”மதுரையில் சாதா சங்கரா இருந்த என்னை சென்னை அம்பானி சங்கராக்கிடுச்சு. விக்கிபீடியாவிலும் என் பெயரை அம்பானி சங்கர்னு மாத்தினதுல, அதை வச்சு ட்விட்டரிலும் ஒர்ஜினல் ஐடிக்கான டிக் கிடைச்சிடுச்சு.

அவ்ளோதான். அதுக்கப்புறம் என்னையும் அம்பானி டீம்ல உள்ளவன்னு நினைச்சு, இப்படி tag பண்ணி விடுறது அடிக்கடி நடக்கும். நேத்து ரொம்ப ஹைலைட் ஆகிடுச்சு. ஆறு மாத ஸ்டேட்மென்ட்ஸ், ரீபைன்ட் கிடைக்காதுனு என்னென்னமோ டீட்டெயில்ஸ் போட்டு எனக்கு டேக் போட்டு விட்டுட்டாங்க. அதனாலதான் அப்படியொரு ட்விட் போட்டேன். ஒரு காமெடி ட்விட்டா நினைச்சுதான் அந்த போஸ்ட்டை போட்டேன். ஆனா, அதுல ‘வடக்கன்ஸ்’னு சொன்னதை பலரும் ரொம்ப சீரீயஸா எடுத்துட்டாங்க. ஒரு தற்செயலா சொல்லிட்டேனே தவிர மத்தபடி யாரையும் காயப்படுத்துற எண்ணத்துல சொல்லலை. இதுல சிலர் ‘இவன் அந்த கட்சி… இவன் இந்தக் கட்சின்னு வேற சொல்றாங்க. நான் சினிமா கட்சி. வேற எந்த கட்சியிலும் கிடையாது. இப்ப ‘இடிமுழக்கம்’, ‘நந்திவர்மன்’, ‘தீர்க்கதரிசி’னு நடிச்சு முடிச்ச படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு.

இன்னொரு பக்கம் கனவுல அம்பானி வந்து, ‘உங்க பெயருக்கு முன்னாடி என் பெயரையும் சேர்த்திருக்கீங்க மிஸ்டர் சங்கர்.. ‘ என சொல்லி கை கொடுத்துட்டு போற கனவெல்லாம் வருது. அது உண்மையாகிடுமோனு பயமும் வருது. இன்னும் சிலர், ‘அம்பானிகிட்ட லோன் வாங்கிக் குடுங்க’னு ரெக்கமென்ட் லட்டர் கேட்டு போன் பண்றாங்க. அவ்ளோ ஒர்த் இல்லீங்க நான். ஆளை விட்டுடுங்க!” என கலகலக்கிறார் சங்கர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.