பகாசூரன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ள செல்வராகவன், மோகன்ஜி இயக்கும் பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நட்டி நடராஜூம் நடிக்கிறார். இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் செல்வராகவன் நெற்றியில் குங்குமம் வைத்து கழுத்தில் ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி ஆவேசமாக காணப்படுகிறார். அதோடு பகாசூரன் படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.