லண்டன்: பிரிட்டன் பிரதமர் போட்டியில் இருக்கும் ரிஷி சுனக், பசு மாட்டிற்கு பூஜை செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ரிஷி சுனக் பிரிட்டனிலுள்ள பக்தி வேதாந்த மனோர் கோயிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டார். அப்போது அங்கிருந்த பசு மாட்டுக்கு அவர் பூஜைகள் செய்தார். இதனைத் தொடர்ந்து பேசிய ரிஷி, அங்கிருந்த இந்தியர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்தார். தேர்தல் பிரசாரத்தில் கடைசி நாட்கள் மிகக் கடினமானதாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்த பூஜையில் ரிஷி சுனக்கின் மனைவியும் , இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதாவும் கலந்து கொண்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
#rishisunak more from cow pooja pic.twitter.com/eza24SLOtZ
— MG (@MarkG19828) August 23, 2022
பிரிட்டன் மக்கள் தொகையில் இந்தியர்கள் 10 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிகையில் உள்ளனர். மேலும் பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தியில் இந்தியர்கள் சுமார் 6 சதவீதம் பங்களிப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி லிஸ் ட்ரஸ் முன்னிலை இருக்கிறார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. லிஸ் ட்ரஸ் வெல்லும் பட்சத்தில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று ரிஷி சுனக் தெரிவித்திருக்கிறார்.