பஞ்சாபி பாடலுக்கு ஒரே நேரத்தில் நடனமாடிய இந்தியா – பாக். ராணுவ வீரர்கள் – வைரல் வீடியோ

மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.

பஞ்சாபி பாடகர்கள் சித்து மூஸ்வாலா மற்றும் அம்ரீத் மான் ஆகிய இருவரும் சேர்ந்து பாடிய ‘பாம்பிஹா போலே’ என்ற பாடலுக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை டெல்லி காவல்துறை அதிகாரி ஹர்கோபிந்தர் சிங் தலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவில் இந்திய ராணுவ வீரர்கள் ‘பாம்பிஹா போலே’ பாடலை இசைக்கவிட்டு முதலில் நடனமாடுகின்றனர். இந்திய வீரர்கள் நடனமாடுவதைப் பார்த்து எதிர்முனையில் நின்றிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கைகளை அசைத்து ஆடுகின்றனர். எல்லை தாண்டிய பஞ்சாபி இசையால் ஈர்க்கப்பட்ட இருநாட்டு வீரர்களும் பரஸ்பரத்துடன் நடனமாடிய காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Indian and Pakistani soldiers are dancing and waving at the Line of Control (LoC) with the Sidhu Moosewala’s song! Problem is not with the people, problem is with politics. pic.twitter.com/mzwC90lpbS
— Ashok Swain (@ashoswai) August 26, 2022

இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ள அமைதி மற்றும் மோதல் ஆராய்ச்சித் துறையின் பேராசிரியர் அசோக் ஸ்வைன், ”பிரச்சனை மக்களிடம் இல்லை, அரசியலில் உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: யாருகிட்ட ஃபைன் கேக்குறீங்க” : போலீசாருக்கே தண்ணி காட்டிய EB லைன்மேன்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.