படுத்தேவிட்டானய்யா.. ஓட்டுக்காக மாணவிகளின் காலில் விழுந்து கெஞ்சிய மாணவர்கள்! கலகல ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் இன்று நடந்த பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் ஓட்டுக்கேட்டு மாணவிகளின் காலில் விழுந்து மாணவர்கள் விழுந்து கெஞ்சியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து வருகிறது. தேர்தல் மட்டும் வந்துவிட்டால் போதும் கோட்டையில் இருக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் செல்வந்தர்கள் வீதிகளில் இறங்கி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடு இன்றி கால்களில் விழுந்து ஓட்டு கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கட்சி சார்ந்த இத்தகைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே ‛டப்’ கொடுக்கும் வகையில் தான் ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. அதாவது மாணவர் சங்க தேர்தலில் ஓட்டு கேட்டு மாணவ-மாணவிகள் சகமாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து ஓட்டு கேட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான விபரம் வருமாறு:

கல்லூரி மாணவர் சங்க தேர்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கல்லூரி, பல்கலைக்கழகங்கள் முறையாக செயல்படாமல் இருந்த நிலையில் தான் தற்போது மாணவர் சங்க தேர்தல் களைக்கட்டியுள்ளது. இதில் பல்கலைக்கழகம், கல்லூரி வாரியாக ஏராளமான மாணவர் அமைப்பினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

விறுவிறு தேர்தல்

விறுவிறு தேர்தல்

இதன்மூலம் கல்லூரி, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் மாணவர் சங்க தலைவர், துணை தலைவர், பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்றது. ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இந்த தேர்தல் நடைபெற்றது.

 6 லட்சம் பேருக்கு ஓட்டு

6 லட்சம் பேருக்கு ஓட்டு

இதில் ராஜஸ்தான் பல்கலைக்கழக தேர்தலில் மொத்தம 20,700 ஓட்டுகள் இரந்த நிலையில் மாநிலம் முழுவதும் மொத்தம் 6 லட்சம் மாணவர்கள் ஓட்டளிக்க தகுதியானவர்களாக இருந்தனர். காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில் பரத்பூர் உள்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஓட்டளிக்க வந்த நிலையில் தேர்தலில் பதவிகளுக்கு போட்டியிட்டுள்ள மாணவ-மாணவிகள் சக மாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து ஓட்டு சேகரித்தனர். மேலும் பலர் மாணவ-மாணவிகளின் கால்களை பிடித்து கெஞ்சி ஓட்டுப்போடும்படி கேட்டு கொண்டனர்.

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி மற்றும் என்எஸ்யூஐ இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் சுயேச்சையாகவும் பலர் களம் இறங்கி உள்ளனர். சில பொறுப்புகளில் அரசியல் பின்புலம் உள்ளவர்களின் வாரிசுகள் போட்டியிட்டுள்ளன. குறிப்பாக ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் இன்று பதிவான ஓட்டுக்கள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.