வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி, தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு(2021) நவ., இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில், இந்த நிறுவனம் தற்போது நடத்திய கருத்துக்கணிப்பில், பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். 75 சதவீதம் பேர் அவரது தலைமையை அங்கீகரித்துள்ளனர்இதற்கு அடுத்து 2வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்டரஸ் மனுவேல் லோபஸ் 63 சதவீத ஆதரவுடனும்
3வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 சதவீத ஆதரவுடனும்
4வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 சதவீத ஆதரவுடனும்
5வது இடத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 41 சதவீத ஆதரவுடனும்
6வது இடத்தில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவீத ஆதரவுடனும்
7வது இடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடோ 38 சதவீத ஆதரவுடனும்
8வது இடத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 34 சதவீத ஆதரவுடனும்
9வது இடத்தில் ஜெர்மனி சான்சிலர் ஸ்கால்ஜ் 30 சதவீதஆதரவுடனும்
10வது இடத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 சதவீத ஆதரவுடனும் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement