பிரபலமான உலகத் தலைவர்கள் வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட MORNING CONSULT என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆகஸ்ட் 17 முதல் 23 வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 75 சதவிகித ஆதரவுடன், பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரடார் (ANDRES MANUEL LOPEZ OBRADOR) 63 சதவிகிதத்துடன் 2 ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் (ANTHONY ALBANESE) 58 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவிகிதம், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 39 சதவிகிதம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரோன் 34 சதவிகிதம், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 25 சதவிகித ஆதரவையே பெற்றுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM