பாட்னா: பீகாரில் பாஜ.வுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், அதன் கூட்டணியை முறித்து, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. நிதிஷ் தனது பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் சமீபத்தில் கூட்டப்பட்டது. பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிதிஷ் பெரும்பான்மையை நிரூபித்தார். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அவாத் பிகாரி சவுதாரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவையின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டன.