உலகளவில் டெக் வர்த்தகச் சந்தையில் சீனா-வின் பெய்ஜிங் நகரத்திற்கு அடுத்தபடியாக, ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள சிறந்த தொழில்நுட்ப HUB-களில் ஒன்றாகப் பெங்களூரு உள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகியவை உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் தரமான அலுவலக இடங்களுக்கான நிலையான தேவை மற்றும் அதிகப்படியான திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு இருக்கும் காரணத்தால் உலகளவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் KKR!
தொழில்நுட்ப சந்தைகள்
உலகளவில், மொத்தம் 115 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நகரங்களில் இருந்து 46 சிறந்த தொழில்நுட்ப சந்தைகள் அடையாளம் காணப்பட்டன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 14 நகரங்களில் ஆறு இந்திய நகரங்களாக இருந்தன.
இந்திய ஐடி துறை
கடந்த நிதியாண்டில் இந்திய ஐடி துறையில் சுமார் 5,00,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட் ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் மூலம் இந்தியாவில் ஐடி சேவை துறை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத்
தேசிய சராசரியான 35 சதவீதத்தை விடப் பெங்களூர் தொழில்நுட்பத் துறை சராசரியாக 38%-40% பங்கைக் கொண்டுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் தாயகமான ஹைதராபாத், தேசிய அளவில் 44 மில்லியன் சதுர அடி அலுவலகத் திட்டங்களைக் கொண்டுள்ளது.
சென்னை
தென்னிந்தியாவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நகரங்களைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நகரமான சென்னை இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நகரமாகவும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய டேட்டா சென்டர் சந்தைகளில் ஒன்றாகும் உள்ளது.
ஆசியா பசிபிக் சந்தை
சர்வதேச சொத்து ஆலோசகர் கூறுகையில் திறமை, அலுவலக ரியல் எஸ்டேட் மற்றும் வணிகச் சூழல் ஆகிய காணிகள் அடிப்படையில், ஆசியா பசிபிக் சந்தை மட்டும் உலகளவில் சுமார் 14 தொழில்நுட்ப நகரங்களைக் கொண்டுள்ளது. இந்த இடங்களில் உள்ள பெரிய அளவிலான கிரேடு A அலுவலகத் திட்டங்கள் பல லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
Bengaluru is close behind Beijing as top tech hub in APAC
Bengaluru is close behind Beijing as top tech hub in APAC பெய்ஜிங் நகரத்திற்கு டஃப் கொடுக்கும் பெங்களூர்.. சென்னை-யும் அசத்தல்..!